அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்து விட்டது. இதுவரை காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த படத்திலும் எல்சியு இடம் பெறுமா? இல்லையா? என்பது குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது லியோ படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த ஒரு சஸ்பென்ஸ் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த லியோ படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் சிங்கத்தின் குணாதிசயங்களை கொண்டதாம். அதனால் அதை வெளிப்படுத்தும் வகையில் விஜய் ஆவேசமாக கர்ஜிக்கும் காட்சிகளில் சிங்கம் தொடர்பான காட்சிகளும் கர்ஜனைகளும் இடம் பெறுகிறதாம். இதற்காக ஒரு சிங்கத்தை சில காட்சிகளில் நடிக்க வைக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். மேலும் இந்த சிங்கம் சம்பந்தப்பட்ட காட்சியை சிஜி மூலம் விஜய்யுடன் இணைக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். அதனால் விஜய்யின் முந்தைய படங்களை விட இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் அவரது ஆவேசம் மிக அதிரடியாக இருக்கும் என்று லியோ பட வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.