டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். செந்தில், ஜீவிதா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அந்த வகையில் மாஜி ஹீரோயினான ஜீவிதா 33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இப்படத்தில் பணியாற்றிய முக்கிய நபர்களுக்கு ஒரு விருந்து அளித்திருந்த ஐஸ்வர்யா ரஜினி, விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், அப்போது ரஜினி, செந்தில், ஜீவிதா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதுவரை லால் சலாம் படத்திற்காக தான் படமாக்கி உள்ள 50 நிமிட காட்சிகளை எடிட் செய்து அதை ரஜினிக்கு போட்டு காண்பித்துள்ளார் ஐஸ்வர்யா. அந்த காட்சிகளை பார்த்து ரஜினி ஆச்சரியம் அடைந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தனது தந்தையின் இந்த பாராட்டு காரணமாக ஐஸ்வர்யா ரஜினி உற்சாகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.




