லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மும்பை மாடல் அழகியான மிஷா நரங் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் விமல் ஜோடியாக 'துடிக்கும் கரங்கள்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் கன்னட படத்தில் அறிமுகமாகிறார். மஞ்சு ஸ்வராஜ் இயக்கும் படத்தில் அஜய்ராவ் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
இதுகுறித்து மிஷா நரங் கூறியதாவது: கேஜிஎப், காந்தாரா படங்கள் மூலம் கன்னட சினிமா, உலகத்தின் கவனத்தை பெற்றிருக்கும் நேரத்தில் நான் கன்னடத்தில் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை, கலாச்சாரத்தை கற்றுக் கொள்ள நினைப்பேன். தெலுங்கு, தமிழை ஓரளவுக்கு கற்றுக் கொண்டேன். இப்போது கன்னடம் கற்று வருகிறேன். அதோடு நேரம் கிடைக்கும்போது கர்நாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து அந்த மக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
மைசூரில் படப்பிடிப்பு நடந்தபோது புகழ்பெற்ற சாமுண்டி மலைகள் மற்றும் மைசூர் அரண்மனையை சுற்றிப் பார்த்தேன். சாமுண்டேஸ்வரி கோவிலில் நேர்மறையான அதிர்வுகளை உணர்ந்தேன். அதனால் கன்னட சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. என்கிறார் மிஷா.