பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இந்தியாவை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து 'தி கிரேட் எஸ்கேப்' என்கிற ஆங்கிலப் படத்தை உருவாக்கி உள்ளனர். ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர் மற்றும் இயக்குநராக பணியாற்றிய சந்தீப் ஜே.எல் என்பவர் இயக்கி, நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே 'அவுட்ரேஜ்' என்ற ஆங்கிலப் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் இவருடன் தமிழ் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள். சௌத் இண்டியன் யுஎஸ் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. கைசாட் பட்டேல், பிரோஸ் பட்டேல் இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். கென்டின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற மே 12ம் தேதி வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநரும், நடிகருமான சந்தீப் ஜே.எல் கூறுகையில், “அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி, உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாபியா கும்பலிடம் சிக்கிக்கொள்ள, அவரை அந்த கும்பல் துரத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து நாயகனை மற்றொரு மாபியா குழுவின் தலைவன் பாபு ஆண்டனி காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இரண்டு மாபியா குழுவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கிறது. இறுதியில் நாயகனை பாபு ஆண்டனி எப்படி காப்பாற்றுகிறார், எதற்காக காப்பாற்றுகிறார், என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடும், மெய் சிலிர்க்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுடனுடம் சொல்லியிருக்கிறோம்” என்றார்.