வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தனது பெயரில் 'சினேகன்' என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி 'சினேகம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இரண்டுக்-கும் உள்ள பெயர் பொருத்தத்தை வைத்து நடிகை ஜெயலட்சுமி தனது பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. “நன்கொடை பெற்று மோசடி செய்ததாக எந்தப் புகாரும் இல்லை. தெரியாத நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவில்லை. ஆதாரமே இல்லாமல் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்: என்று ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ஜெயலட்சுமி மீதான பண மோசடி வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார். இதனை ஏற்ற நீதிமன்றம் ஜெயலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.