ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்த நிறுவனம் தயாரித்து இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த 'வீ ரசிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா' ஆகிய இரண்டு படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது.
தற்போது விஜய் தேவரகொன்டா, சமந்தா நடிக்கும் 'குஷி', அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது. அடுத்து சில பிரம்மாண்டப் படங்களையும் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் அலுவலங்களில், 'புஷ்பா' இயக்குனர் சுகுமார் இல்லத்தில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்கிறது. வரி ஏய்ப்பு ஏதும் நடந்துள்ளதா என சோதனை நடைபெறுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்நிய முதலீடு குறித்து அமலாக்கத் துறையும் சோதனை நடத்தி வருகிறதாம்.
முறையான விதிகளை கடைபிடிக்காமல் வெளிநாடுகளிலிருந்து சுமார் 500 கோடி அளவிற்கு மைத்ரி நிறுவனம் பணத்தைப் பெற்றுள்ளதாக சந்தேகப்பட்டு சோதனை நடப்பதாகச் சொல்கிறார்கள். இந்த சோதனைகளால் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.