விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

வீரன் பெரியவரா, மன்னன் பெரியவரா என்று கேட்டால் மன்னன் தான் பெரியவர் என்று எளிதில் சொல்லிவிடுவார்கள். அப்படி ஒரு நிலை ஒரு 'மாவீரனுக்கு' ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் 'மாமன்னன்'.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை மே மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகளில் தாமதமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மே மாதத்தில் படத்தை வெளியிட வாய்ப்பில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லிவிட்டாராம். அவரது யோசனையை ஏற்ற தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் படத்தை ஜுன் மாதக் கடைசிக்குத் தள்ளி வைத்துவிட்டார்களாம்.
'மாமன்னன்' வெளியீடு ஜுன் மாதம் தள்ளிப் போனதால், அப்போது வெளியாக திட்டமிடப்பட்டிருந்த 'மாவீரன்' படத்தை ஜுலை கடைசிக்கு மாற்றியிருக்கிறார்களாம். 'மாவீரன்' படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடுவதால் தான் இந்த தள்ளி வைப்பு. 'மாமன்னன்' படம் உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டுள்ளதால் அப்படத்தை வேறு எந்தப் படத்துடனும் போட்டியாக வெளியிட விரும்ப மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.




