தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிகர் ராமராஜன் நடித்து வரும் படம் சாமானியன். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வி.மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை தம்பிக்கோட்டை பட இயக்குநர் ஆர்.ராகேஷ் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகைகள் ஸ்மிருதி வெங்கட், அபர்னிதா நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே எஸ். ரவிக்குமார், சரவணன் சுப்பையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ராமராஜனின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா இசையமைக்கிறார். இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு 'சாமானியன்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கான பின்னணி இசை பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார் இளையராஜா. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராமராஜன், தயாரிப்பாளர் வி.மதியழகன், இயக்குநர் ராகேஷ் ஆகியோர் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.