துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
மானாமதுரை அருகே உள்ள கந்தசாமி முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதான நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இதை அடுத்து மீடியாக்களை சந்தித்த கஞ்சா கருப்பு, இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது படப்பிடிப்பு இருந்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் தான் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டேன்.
இதையடுத்து சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க போகிறேன். அது எதற்காக என்றால், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதை அடுத்து முதல்வராக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியுள்ள கஞ்சா கருப்பு, கூடிய சீக்கிரமே தமிழகத்தில் அதிமுகவின் நேர்மையான நல்லாட்சி நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்திருந்தால் கரண்ட் பில், வீட்டு வரி எல்லாம் அதிகரித்திருக்காது. அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார்.