மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன், இந்தியன் 2 போன்ற பிரமாண்ட படங்களையும், பல மீடியம் பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்து வரும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் முழு உரிமையையும் இந்நிறுவனம் வாங்கி உள்ளது. மேலும் பட தலைப்பும் 'மிஷன் சாப்டர் 1' என பெயர் மாற்றம் செய்து கீழே ச உப தலைப்பாக 'அச்சம் என்பது இல்லையே' என வைத்துள்ளனர். இந்த படத்தை எம்.ராஜசேகர், எஸ்.சுவாதி தயாரித்தனர்.
இந்த படத்தை 70 நாட்களில் ஏ.எல்.விஜய் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார். அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். லண்டன் சிறையில் வாடும் தவறாக தண்டிக்கப்பட்ட கைதிகளை மீட்கிற கதை. ஜீ.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.