ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் விஸ்வபிரசாத் தயாரிக்கும் படம் 'வடக்குபட்டி ராமசாமி'. 'டிக்கிலோனா' படத்திற்கு பிறகு கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் இதுவாகும். சந்தானம் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேசு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சந்தானம்-இயக்குநர் கார்த்திக் யோகியின் முந்தைய 'டிக்கிலோனா' படத்தின் வெற்றியும் இதற்கு முக்கிய காரணம். இந்தக் கூட்டணி மற்றொரு வசீகரிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, அனைத்து விதமான பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையிலான அடுத்தக் கதையுடன் வந்திருக்கிறார்கள். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.