ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் மாதம் தங்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத் தாய் குழந்தை பிறப்பு பற்றி அரசாங்கம் இயற்றிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அது பற்றிய விசாரணை நடந்து எந்த விதி மீறலும் இல்லை என அறிவிக்கப்பட்ட பின் அந்த சர்ச்சை அடங்கியது.

தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் என்ன பெயர் வைத்தார்கள் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “உயிர், உலகம்” என்பதைக் குறிப்பிடும் வகையில், “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். இதை விக்னேஷ் சிவன் இன்ஸ்டா வாயிலாக உறுதிப்படுத்தி உள்ளார்.




