இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளியான திரைப்படம் பத்து தல. இந்த படத்தை காண நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என டிக்கெட் சரிபார்பவர் உள்ளே அனுமதிக்காமல் இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.
தொடர்ந்து அந்த ஊழியரை கண்டித்தும், ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தையும் கண்டித்தும் சமூகவலைதளங்களில் கண்டன குரல்கள் எழுந்தன. மேலும் இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகம் ஒரு விளக்கத்தையும் கொடுத்தது. இந்தப்படம் யு-ஏ சான்று படம். நரிக்குறவர்கள் சிறு குழந்தைகளை அழைத்து வந்ததால் அனுமதிக்கவில்லை என்றனர். அதேசமயம் பின்னர் அவர்கள் அனைவரையும் படம் பார்க்க வைத்ததாகவும் வீடியோவையும் வெளியிட்டனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு மதுரையில் மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "எந்த ஒரு மனிதனும் ஒடுக்கப்படுவதும் ஏற்று கொள்ள முடியாது. இந்த பூமி மனிதர்கள் எல்லோரும் வாழ்வதற்கு படைக்கப்பட்டது. வேற்றுமையை யார் கடைப்பிடித்தாலும் தவறு தான்" என்றார்.