ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம் சரண். ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அரசியல் கதைகளத்தில் உருவாகும் இதில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து தனது 16வது படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இதை 'உப்பென்னா' படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்கவுள்ளார். இயக்குனர் சுகுமார் வசனம் எழுதுகிறார். கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. நேற்று நடிகர் ராம் சரண் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர்.




