ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கிஷோர். முதல் படத்திலேயே தேசிய விருதுபெற்ற நடிகராக மாறினார். தொடர்ந்து ‛கோலிசோடா' உள்ளிட்ட தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலித்து வந்தார். ப்ரீத்தியை விட கிஷோர் 4 வயது சிறியவர். இதுகுறித்து அப்போது சில விமர்சனங்களும் எழுந்தன. அதேசமயம் தனது காதலில் உறுதியாக இருந்த கிஷோர் 'அடுத்த பிறந்தநாளை கணவன் மனைவியாக கொண்டாடுவோம்' என உறுதியாக அறிவித்திருந்தார். அதற்கேற்றார்போல் உற்றார் உறவினர் புடைசூழ கிஷோர் - ப்ரீத்தி திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் கிஷோர் - ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.