பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்ட படம் வணங்கான். இந்த படத்தை சூர்யா தயாரித்து, அவரே நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று அவரும் நடித்து வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக பாலா அறிவித்தார். தற்போது இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் பாலா.
இத்திரைப்படத்திற்காக கேரளாவில் இருந்து சில துணை நடிகைகளை அழைத்து வந்துள்ளார் ஜிதின் என்கிற ஒருங்கிணைப்பாளர். துணை நடிகைகளில் ஒருவரான லிண்டா, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் “வணங்கான் படத்தில் 3 நாட்கள் நடிக்க மொத்தமாக 22 ஆயிரத்து 600 ரூபாய் பேசினார்கள். ஆனால் சொன்னபடி அந்த தொகையை கொடுக்கவில்லை. அதை எதிர்த்து கேட்டதற்கு அடித்து உதைக்கிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளார்.