ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதை குறித்து ஈஸ்வரியிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைகள் மீட்புஇந்த நிலையில் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுளனர். இவர்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதியானது. ஈஸ்வரியிடம் போலீஸ் நடத்தி வந்த விசாரணையில் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் உதவியோடு சிறிது சிறிதாக சுமார் 100 பவுன் வரை தங்க நகைகள் திருடி உள்ளார்கள். இது அல்லாமல் 30 கிராம் டைமண்ட், வீட்டு பத்திரம், 4 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.