ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் 'ஆடுகளம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பின் 'ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில்தான் அதிகம் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேஷன் நிகழ்வில் டாப்ஸி அணிந்த ஆடையும், ஆபரணமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சியான சிகப்பு நிற கவுன் அணிந்து, கழுத்தில் மகாலட்சுமி உருவத்துடன் அவர் அணிந்த நெக்லஸ் தான் இந்த சர்ச்சைக்குக் காரணம்.
கடவுள் உருவம் பொறித்த நெக்லசை இப்படி கவர்ச்சியான ஆடையுடன் அவர் அணியலாமா என பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில்தான் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் விதத்தில் சில செயல்கள் நடந்துள்ளன. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகையே இப்படி செய்வது சரியா என்றும் கேள்வி எழுந்துள்ளது.