அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மார்ச் மாதம் என்றாலே தேர்வுகள் மாதம் தான். சில நாட்களுக்கு முன்புதான் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. அடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த மாதத்தில் தியேட்டர்கள் பக்கம் குடும்பத்தினர் வருகை மிக மிகக் குறைவாகவே இருக்கும். இளம் ரசிகர்களை நம்பித்தான் இந்த மாதத்தில் படங்களை வெளியிட வேண்டும்.
இந்த வாரம் மார்ச் 17ம் தேதி “கண்ணை நம்பாதே, ராஜா மகள், குடிமகான், கோஸ்டி, டி3” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இவற்றில் 'கண்ணை நம்பாதே, கோஸ்டி' ஆகிய இரண்டு படங்கள் தான் 'ஸ்டார் வேல்யூ' உள்ள படங்கள். 'கண்ணை நம்பாதே' படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, பிரசன்னா, ஸ்ரீகாந்த் இணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். 'கோஸ்டி' படத்தில் காஜல் அகர்வால் முதன்மைக் கதாநாயகியாக நடிக்க யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிறிய பட்ஜெட் படங்களான 'குடிமகான்' படத்தில் விஜய் சிவன், சாந்தினி, 'ராஜா மகள்' படத்தில் ஆடுகளம் முருகதாஸ், வெலீனா, 'டி 3' படத்தில் பிரஜின், வித்யா பிரதீப் நடித்துள்ளனர். இவை தவிர கன்னடத்திலிருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள 'கப்ஜா' படமும் வெளியாகிறது.