லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
95வது ஆஸ்கர் விருதில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை தமிழில் தயாரான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம் பெற்றது. தமிழகத்தில் உள்ள முதுமலை தேசியப்பூங்காவில் யானைகளை வளர்க்கும் தம்பதிகளான பொம்மன், பெல்லி ஆகியோர் அந்த டாகுமென்டரியில் இடம் பெற்றிருந்தார்கள். அனாதையாக வந்த யானைக்குட்டிகளை அந்தத் தம்பதியினர் எப்படி வளர்க்கிறார்கள் என்பது பற்றியதுதான் அந்த டாகுமென்டரி படம்.
பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த டாகுமென்டரியில் நடித்திருந்த பொம்மன், பெல்லி இருவரும் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை இன்று(மார்ச் 15) சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் முக ஸ்டாலின். அதோடு இருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தார். அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.