'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? |
சந்துரு இயக்கத்தில், ரவி பர்சூர் இசையமைப்பில், உபேந்திரா, சுதீப், ஷ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னடப் படம் 'கப்ஜா'. இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 17ம் தேதி மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது.
வெளியான இரண்டு நாட்களிலேயே இந்த டீசர் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு நடைபெறும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் குற்றச்சம்பவங்களைச் செய்து நிழல் உலக தாதாக்கள் எப்படி உருவானார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை என்கிறார் படத்தின் இயக்குனர் சந்துரு.
டீசரில் உள்ள காட்சிகள், படத்தின் பிரம்மாண்டம், பின்னணி இசை ஆகியவை இந்த டீசருக்கு எதிர்பார்க்காத அளவில் வரவேற்பு கிடைக்கக் காரணமாக அமைந்துள்ளது. இரண்டு நாளில் 2 கோடி பார்வைகள் என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல.
கன்னடத்திலிருந்து வந்த 'கேஜிஎப் 2' படம் இந்த ஆண்டில் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்தது. 'கப்ஜா' படத்தின் டீசருக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தப் படமும் 'கேஜிஎப் 2' வரிசையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு கன்னடத் திரையுலகத்தில் இப்போதே எழுந்துள்ளது.
பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.