100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
'கேஜிஎப்' பாணியில் கன்னடத்தில் உருவாகி வரும் பான் இந்தியா படம் 'கப்ஜா'. இது சுதந்தர போராட்ட காலத்தில் உருவான தாதாக்களின் கதை. இதில் உபேந்திரா, கிச்சா சுதீப், சிவராஜ்குமார், முரளி சர்மா என கன்னடத்தின் முன்னணி நடிகர்கள் நடிக்க, ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ளார். ஆர்.சந்துரு இயக்கி உள்ளார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ருர் இசை அமைத்துள்ளார்.
மிகவும் எதிபார்க்கப்படும் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட கேஜிஎப் பாணியில் இந்த டிரைலர் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க ஆக் ஷன் பாணியில் வெளியாகி உள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராக உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்தும் உள்ளனர்.