100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ள லியோ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி அப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டது. அதோடு இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் , மிஷ்கின், திரிஷா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடப்பு காஷ்மீரில் நடக்கிறது.
மாஸ்டர் படத்தை போலவே லியோ படத்தில் விஜய்யின் ஹேர் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது. முக்கியமாக இந்த படத்தில் விஜய்யை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக 30க்கும் மேற்பட்ட ஹேர்ஸ்டைலை தயார் செய்து அதில் ஒன்றை தேர்வு செய்து தற்போது நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ். இந்த ஹேர் ஸ்டைல் விஜய்யையும் கவர்ந்து உள்ளதாம்.