பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அதையடுத்து மணிரத்னம் மற்றும் எச். வினோத் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இதுஒருபுறம் இருக்க பட தயாரிப்பிலும் தீவிரமாக உள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார். பத்து தல படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் அவரது 48வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதை கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். சில தினங்களுக்கு முன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
வெந்து தணிந்தது காடு படத்தின் இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்ட போது, அவருடன் இணைந்து நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார் சிம்பு. இந்த நிலையில் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் வேடத்தை போன்று இந்த படத்தில் கமல் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.