பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎப்- 2 படத்தில் வில்லனாக மிரட்டியவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். அதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமாகிறார். இந்த படத்திலும் கேஜிஎப்-2 வை போன்று ஒரு அதிரடியான வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் சஞ்சய் தத். தற்போது விஜய்யுடன் அவர் இணைந்து நடித்து வரும் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜிற்கு இன்று(மார்ச் 14) பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார் சஞ்சய் தத். அந்த பதிவில், என்னுடைய சகோதரர், மகன், எனது குடும்பத்தில் ஒருவரான லோகேஷ் கனகராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது வெற்றிக்கு கடவுள் துணை நிற்பார். அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் உடல் நலத்துடனும் நீண்ட காலம் நீங்கள் வாழ எனது வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எப்போதும் நான் இருப்பேன் என்று பதிவிட்டு இருக்கிறார் சஞ்சய் தத். அதோடு லோகேஷ் உடன் இணைந்து தான் எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு உள்ளார்.