மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! |
தமிழ் சினிமாவில் சந்தானம் காலத்திற்கு முன்பு தமிழ் சினிமா நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தவர் மறைந்த நடிகர் விவேக். அவருடைய படங்களில் பல சமூகக் கருத்துக்களை நகைச்சுவை கலந்து சொல்லியவர்.
நேற்று ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நாளில் திடீரென விவேக் பற்றிய ஒரு நினைவுப் பகிர்வை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். அதிலும் யாரோ ஒரு அஜித் ரசிகர் விஜயகாந்த், விவேக் நடித்த 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' படத்தின் காட்சி ஒன்றை வீடியோவாகப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்த ரசிகர் அதில், “தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” என்று பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவை ரீடுவீட் செய்து ஏஆர் ரஹ்மான், “காமெடி சாதனையாளர் விவேக்கை மிஸ் செய்கிறோம், மாபெரும் இழப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் திடீரென விவேக் பற்றி ஏஆர் ரஹ்மான் பதிவிட்டது குறித்து கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்துள்ளார்கள்.
ஆஸ்கர் விருது வென்ற பின் இசையமைப்பாளர் கீரவாணி நேற்று ஆங்கிலத்தில்தான் பேசினார். ஒரு வார்த்தை கூட அவர் தெலுங்கில் பேசவில்லை. அதைக் குறித்து தாய்மொழியின் பெருமையைப் பற்றிப் பேச வேண்டும் என மறைமுகமாக ஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ளாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற போது கடைசியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என தமிழில் குறிப்பிட்டுப் பேசினார்.