100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
தெலுங்கில் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம்சரண். தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க போவதாக அவரே கூறியுள்ளார். 2007ம் ஆண்டு வெளியான சிறுத்தை படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் ராம்சரண். நடிகர் சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும் தனது கடின உழைப்பால் இன்று இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகர் ஆக உள்ளார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி உலக அளவில் மிகப் பெரிய ஹிட்டான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தை ராஜமவுலி இயக்கினார். இந்த படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் ரேஸில் உள்ளது. தற்போது ஷங்கரின் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஹாலிவுட் இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.