ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களை மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் என இரண்டு படங்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை திருப்திப்படுத்த தவறி தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார், ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது.
அதே சமயம் புராணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் மற்றும் பிரபாஸின் தோற்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் கிண்டலான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில் பிரபாஸ், அமிதாபச்சன், தீபிகா படுகோனே கூட்டணியில் உருவாகி வரும் புராஜெக்ட் கே படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் புராஜெக்ட் கே படம் பற்றி ஒரு அப்டேட் தகவலை வெளியிட்டுள்ளார்.
இப்போது வரை 70% படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாகவும் இந்த படத்திற்கான விஎப்எக்ஸ் பணிகளே அடுத்த வருடம் முழுவதும் எடுத்துக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த படம் விஷ்ணுவின் நவீன காலத்து அவதாரமாக உருவாகி வருகிறது என்கிற தகவலையும் கூறியுள்ளார். இந்த படத்திற்காக சர்வதேச தரத்திலான கிட்டத்தட்ட ஐந்து சண்டை பயிற்சி இயக்குனர்களை வெளிநாட்டில் படமாக்கும் சண்டைக்காட்சிகளுக்காக ஒப்பந்தம் செய்துள்ளோம். ஒவ்வொன்றும் படத்தில் பார்க்கும்போது ரசிகர்களை பிரமிக்க வைக்கும் என்றும் கூறியுள்ளார்