நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் |
நடிகர், இசையமைப்பாளர் என பயணித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடிப்பில் வாத்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் இன்று(பிப்., 17) வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக அடியாத்தி வாத்தி பாடல் ரசிகர்களின் ரீங்காரமாய் மாறி உள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷை வாழ்த்தி உள்ளார் சக இசையமைப்பாளரான தமன்.
அவர் கூறுகையில், ‛‛விருதுகளுக்கு தயாராகுங்கள் அன்பு சகோதரர் ஜிவி பிரகாஷ் அவர்களே... வாத்தி மற்றும் சார் படத்திற்கு வாழ்த்துகள். அடுத்தமுறை உங்களுடன் இணைய முயற்சி செய்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.