ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சென்னை: சென்னையில் காமெடி நடிகர் 'ரோபோ' சங்கரின் வீட்டில், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர் 11வது தெருவில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. இவர், அஜித்குமார், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், தன் வீட்டில் இரண்டு கிளிகள் வளர்ப்பது குறித்து, சமூக வலைதளத்தில், 'வீடியோ' பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வனத்துறை அதிகாரிகள், வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டிற்கு நேற்று சென்றனர்.
விசாரணையில், அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வீட்டில் அவர் சட்ட விரோதமாக வளர்த்து வந்த இரண்டு கிளிகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.