ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது தனது மனைவி ஜோதிகா, மற்றும் மகன், மகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, தி.நகரில் பிரம்மாண்ட வீடு ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு கட்டி அங்குதான் பெற்றோர், தம்பி கார்த்தி ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மட்டும் மும்பையில் தனிக்குட்டித்தனம் சென்றுவிட்டார் என்கிறார்கள். கடந்த வாரம் கூட அந்த மும்பை வீட்டிலிருந்து, ஜோதிகா சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மரியாதை மற்றும் அன்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புக்கும் மும்பை வீட்டிலிருந்து வந்து போகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.