ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையாக வலம் வந்தார் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் துடிப்பும் துள்ளலுமான கதாநாயகியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் 2014ல் திருமணம், அதன்பிறகு கணவருடன் பிரிவு என சோதனையான காலகட்டத்தை சந்தித்தார். இதனால் திரையுலகில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் முயற்சியாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான மகள் என்கிற படத்தில் டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக அதேசமயம் மீண்டும் கதாநாயகியாகவே உள்ளே நுழைந்தார். இந்த நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கிலும் விமானம் என்கிற படம் மூலம் மீண்டும் கதாநாயகியாக அடி எடுத்து வைக்கிறார் மீரா ஜாஸ்மின். அவரது 40 வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. அதேபோல கடைசியாக 2014ல் தமிழில் அவர் நடித்த விஞ்ஞானி படம் வெளியானது. இதைத் தொடர்ந்து தமிழிலும் ஒன்பது வருட இடைவெளி விட்டு மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.