அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
இந்திய திரைநட்சத்திரங்கள் விளையாடும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்(சிசிஎல்) தொடர் பிப்., 18ல் துவங்குகிறது. இதில் சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பஞ்சாப் தி ஷேர் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. இதன் கேப்டன்களாக ஜீவா, ரித்தேஷ் தேஷ்முக், அகில், மனோஜ் திவாரி, குஞ்சாக்கோ போபன், ஜிசுசென் குப்தா, சுதீப், சோனு சூட் ஆகியோர் உள்ளனர்.
ராய்ப்பூர், பெங்களூர், ஐதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 6 நகரங்களில் 19 ஆட்டங்களை நடக்க உள்ளன. இப்போட்டிகள் 7 வெவ்வேறு ZEE டிவி நெட்வொர்க்குகளில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும். Zee Anmol Cinema சேனல் அனைத்து 19 CCL கேம்களையும் ஒளிபரப்பவுள்ளது.
120க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.