பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித், சிம்ரன் நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்த 'வாலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அடுத்து விஜய் நடித்த 'குஷி' படத்தை இயக்கிய பின் அதே படத்தை தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கினார். அதற்கடுத்து 'நியூ' படத்தை தமிழில் இயக்கி கதாநாயகனாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்படத்தை ஒரே சமயத்தில் மகேஷ் பாபு நடிக்க தெலுங்கிலும் இயக்கினார். இயக்கத்தை விட நடிப்பின் மீது அதிக சினிமா தாகம் கொண்டவர் எஸ்ஜே சூர்யா. 'அன்பே ஆருயிரே, இசை' ஆகிய படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அந்தப் படங்கள் சரியாகப் போகவில்லை.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்த 'இறைவி' படம் அவரது நடிப்புக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தமிழ், தெலுங்கில் உருவான மகேஷ் பாபு நாயகனாக நடித்த 'ஸ்பைடர்' படத்தில் வில்லனாக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை என்றாலும் சூர்யாவின் வில்லத்தன நடிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று வரை அந்தப் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 'மீம் கன்டென்ட்' ஆக வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து தமிழில், “மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா, இந்தியன் 2, ராயன்'' ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அவருக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டார். அவரது வில்லத்தன நடிப்புக்கென ரசிகர் கூட்டமும் வந்து சேர்ந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த 'சரிபோத சனிவாரம்' படம் நேற்று வெளியானது. அதில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பும், பேச்சும் தெலுங்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ரசிகர்கள் மட்டுமல்லாது, விமர்சகர்களும் அவரது நடிப்பைப் பாராட்டி வருகிறார்கள். சில காட்சிகளில் நானியை விடவும் அவர் சிறப்பாக நடித்துள்ளார் என பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் வரவேற்பு அவருக்கு தெலுங்கிலும் நிறைய புது வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள்.
அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' தெலுங்குப் படத்திலும் எஸ்ஜே சூர்யாதான் முக்கிய வில்லன் என்பது கூடுதல் தகவல்.