சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் இயக்குனர் ஆனவர் அவரது இளைய மகள் சவுந்தர்யா. அதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருந்தார். மேலும் இரண்டாவதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்து வரும் சவுந்தர்யா, நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்ணா ஆகியோருடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர்களுக்கு அந்த கோவிலில் உள்ள சண்முகா விலாசத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு திருச்செந்தூர் கடலில் கால் நனைத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள்.




