சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? |
இன்றைய இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் அதிகமாக வீழ்ந்து கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாலை காட்சிகள் நடத்தி அதற்கு இளைஞர்களை வரவழைப்பதை சில சினிமா ஹீரோக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த பொங்கலுக்கு வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை காட்சியின் போது ஒரு இளைஞர் லாரி மீதிருந்து கீழே விழுந்து உயிரைவிட்டது வரை நடந்துள்ளது.
பல கல்லூரி, பள்ளிகளில் சினிமா விழாக்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் 'மைக்கேல்' என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. அங்கு முத்தக்காட்சி ஒன்றை பேனராக வைத்திருக்கிறார்கள்.
பிப்ரவரி 4ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்தான் நடைபெற உள்ளது. சினிமா விழாக்களுக்கு அந்தக் கல்லூரியில் உள்ளவர்கள் எப்படியும் கலந்து கொள்வார்கள். அனைவரும் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்வார்கள். அதனால் இலவச விளம்பரம் கிடைக்கும் என்ற ரீதியில்தான் பலரும் இப்படி செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே, சமூக வலைத்தளங்களில் நடக்கும் ரசிகர்கள் சண்டையால் இன்றைய இளைய சமூகம் தவறான பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்வி நிலையங்களில் நடக்கும் சினிமா விழாக்களை தடை செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுக்கிறார்கள்.