ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு திரைப்பட இயக்குனரான வெங்கி அட்லூரி, பூஜா திருமணம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் இயக்குனர் தான் இந்த வெங்கி அட்லூரி. இவரது திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு நடிகர் நிதின் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்கள்.
திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து, திருமண புகைப்படங்களை நடிகர் நிதின், நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ் வண்ணமயமான ஆடையுடன் திருமணத்தில் கலந்து கொண்டார்.
2007ல் வெளிவந்த 'நாபகம்' படம் மூலம் நடிகராக திரையுலகத்திற்கு அறிமுகமானவர் வெங்கி. 2010ல் வெளிவந்த 'சினேகா கீதம்', 2011ல் வெளிவந்த 'இட்ஸ் மை லவ் ஸ்டோரி' படங்களுக்கு வசனம் எழுதினார். 2018ல் வெளிவந்த 'தொலி பிரேமா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து “மிஸ்டர் மிஞ்சு, ரங் தே” படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் நடிக்க தமிழ், தெலுங்கில் 'வாத்தி' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
'வாத்தி' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிப்ரவரி 4ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.