சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

கடந்த 20 ஆண்டுளுக்கு முன்பு விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு சிறிய துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் ஷாம். அதன்பிறகு கதாநாயகனாக மாறி தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஷாம், மீண்டும் விஜய்யுடன் இணைந்து விரைவில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் அவரது சகோதரராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார் ஷாம். ஆனால் இந்த படத்தில் ஒப்பந்தமான அதே சமயத்தில் தான் அஜித்தின் துணிவு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இவரை அழைத்துள்ளார் இயக்குனர் வினோத்.
ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்களில் நடிக்க போகிறோம் என ஷாம் சந்தோஷப்பட்டாலும் சரியாக வாரிசு படத்திற்காக அவர் ஒதுக்கி இருந்த பெரும்பாலான தேதிகள் தான் துணிவு படத்திற்காகவும் ஷாமிடம் கேட்கப்பட்டது. அதனால் வேறு வழியின்றி துணிவு படத்திற்கு தன்னால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை என கூறி வருத்தத்துடன் ஒதுங்கிக் கொண்டார் ஷாம். அதேசமயம் தன்னை அந்த கதாபாத்திரத்திற்காக யோசித்து அழைத்ததற்காக இயக்குனர் வினோத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் ஷாம்.




