பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. பெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்த இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது.
அது குறித்து 100 நாள் போஸ்டர்களை வெளியிட்டு படத்தைத் தயாரித்த ஹாம்பலே பிலிம்ஸ் நிறுவனம், “நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம். மீண்டும் நம் வேர்களுக்கு அழைத்துச் சென்று, நம் பாரம்பரியங்கள் மீது நமக்கு பிரமிப்பைத் தந்தது. அதை நிறைவேற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளது.
கர்நாடகாவில் சுமார் 40 தியேட்டர்களில் இப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ஓடி 100 நாட்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.