பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி |

தெலுங்கு நடிகரான நரேஷ், நடிகை பவித்ரா இருவரும் புத்தாண்டன்று அவர்களது காதலைப் பற்றிய அறிவிப்பை முத்த வீடியோ ஒன்றுடன் வெளியிட்டனர். தெலுங்குத் திரையுலகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த வீடியோ.
ஆனால், அந்த வீடியோ 'மல்லி பெல்லி' என்ற படத்திற்கான ஒரு விளம்பர வீடியோ என்றும் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் நரேஷ் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். மேலும், தனது மகனுக்கு அப்பா தேவை என்பதால் நரேஷ் இன்னொரு திருமணம் செய்து கொள்ள விடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர் நரேஷ். ஒவ்வொரு மனைவியுடன் அவருக்கு தலா ஒரு மகன் இருக்கிறார்கள். ரம்யா ரகுபதியை அவர் இன்னும் விவாரகத்து செய்யவில்லை என்றும் தெரிகிறது. ரம்யாவின் பேட்டி நரேஷ் - பவித்ரா காதல் விவகாரத்தில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நரேஷ், பவித்ரா ஆகியோர் ஒன்றாக இருந்த போது அவர்களை ரம்யா செருப்பால் அடிக்க பாய்ந்ததாக கடந்த வருடம் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகே நரேஷ், பவித்ரா காதல் விவகாரம் வெளியில் வந்தது.




