அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் |
தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த ஓரிரு வருடங்களாக பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நரேஷ் - பவித்ரா. மறைந்த நடிகர் கிருஷ்ணா மனைவியின் மகனும், முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் இதற்கு முன்பு மூன்று திருமணங்களைச் செய்தவர். அவர் கன்னடத்திலிருந்து தெலுங்கில் நடிக்க வந்த அம்மா வேட நடிகை பவித்ராவைக் காதலிப்பதாக செய்திகள் பரவியது. நரேஷின் மூன்றாவது மனைவி செய்த தகராறால் நரேஷ் - பவித்ரா காதல் உண்மை என்று வெளிச்சத்திற்கு வந்தது.
நரேஷ், பவித்ரா இருவரும் அவர்களது சொந்த வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'மல்லி பெல்லி' என்ற படத்தில் நடித்துள்ளார்கள். அந்தப் படத்தின் புரமோஷன் என சில வீடியோக்களும் வெளிவந்தது. அது அவர்களது சொந்த வாழ்க்கையைப் போல இருந்ததால் அதையும் உண்மை என்று நம்பி பலரும் செய்திகளை வெளியிட்டார்கள். அப்படம் நேற்று தெலுங்கில் வெளியாகிள்ளது. படத்தைப் பார்த்தபின்புதான் அவர்களது சொந்தக் கதையையே சில மாற்றங்களுடன் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
படத்தின் இயக்குனரான எம்எஸ் ராஜு, நரேஷ் கொடுத்த பல விஷயங்களுடன் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறாராம். நரேஷின் மூன்றாவது மனைவியாக வனிதா விஜயகுமார் நடித்துளளாராம். படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இல்லை என்றாலும் நரேஷ் - பவித்ரா காதல் சர்ச்சையை வைத்தே படத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கிறார்களாம்.