சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை | பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? | மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? |
மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யா, கிர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, ராதிகா ஆகியோர் நடிப்பில் கஸ்டடி என்ற படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். இளையராஜா , யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
காவல்துறை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இதில் நாக சைதன்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அதில், 2023ம் ஆண்டு மே 12ல் கஸ்டடி படம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.