பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த செல்லுலாய்டு என்கிற படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து தமிழிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்து, ‛சொப்பன சுந்தரி நான் தானே' உள்ளிட்ட சில பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2016ல் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன்பிறகு அந்த மணமகன் ஏராளமான கண்டிஷன்கள் போடுவதாக கூறி அந்த திருமணமே வேண்டாம் என நிறுத்தினார். பின்னர் கடந்த 2018ல் இன்டீரியர் டெகரேடரும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுமான அனூப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த வருடம் அவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு நிலைமை மாறியது. இவரது விவாகரத்து செய்தி அரசல் புரசலாக வெளியானதே தவிர அதற்கான காரணமும் எதுவும் தெரியவில்லை. அதுகுறித்து வைக்கம் விஜயலட்சுமியும் எதுவும் பேசவில்லை. இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விவாகரத்துக்கான காரணம் குறித்து விஜயலட்சுமி மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசும்போது, “என்னை திருமணம் செய்த நபர் சாடிஸ்ட் என்பது போகப்போகத்தான் தெரியவந்தது. எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதை முழுநேர பணியாக வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பி இருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். அதையெல்லாம் விட எனது பாடல் தொழிலை மேற்கொள்வதற்கு பல நிபந்தனைகளை விதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை.
நான் எப்போதுமே பாடல்களுக்கு முன்னுரிமை தருபவள். அதனால் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. முத்தாய்ப்பாக, “உங்களுக்கு பல்வலி என்றால் அதை பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு அளவுக்கு அதிகமானால் அதை நீக்குவதை தவிர வேறு வழி இல்லை” என்றும் கூறியுள்ளார் விஜயலட்சுமி.