'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் |
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி அவரையும் 'நந்தா' படத்தின் மூலம் திறமையான நடிகராக மாற்றியவர் இயக்குனர் பாலா. 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். நடிப்பதாக அறிவித்து பின்னர் சூர்யா விலகிய மூன்றாவது படம் இது.
இதற்கு முன்பு அவருக்கு கமர்ஷியல் அடையாளத்தை 'காக்க காக்க' படத்தின் மூலம் ஏற்படுத்தித் தந்த கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிப்பதாக அறிவித்து பின் விலகினார். அதற்குப் பிறகு 'சிங்கம்' படத்தின் மூலம் மிகப் பெரும் வசூலை சூர்யாவுக்கு ஏற்படுத்தித் தந்த ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட 'அருவா' படத்திலிருந்தும் விலகினார். இப்போது 'வணங்கான்' படத்திலிருந்தும் விலகியுள்ளார்.
சூர்யா நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும், ஹரி இயக்கத்திலும் சூர்யா நடிக்க மற்றொரு படமும் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அது போல பாலா இயக்கத்தில் இனி சூர்யா நடிப்பாரா என்பதை பாலா மட்டுமே முடிவு செய்வார் என்று சொல்கிறார்கள்.