தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' தெலுங்குப் படம், பான் இந்தியா படமாக கடந்த வருடக் கடைசியில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இப்படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். படத்திற்கான பிரிமீயர் காட்சிகள், டிசம்பர் 1ம் தேதி மாஸ்கோவிலும், டிசம்பர் 3ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் நடைபெற உள்ளது. அதில் படக்குழுவினரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். ரஷ்யாவில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மொழித் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு மொழிப் படங்கள் உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரம்மாண்டமான படங்கள் தெலுங்கில் தயாராகி வருகின்றன.