அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா அந்தஸ்தைப் பெற்றார். தற்போது 'ஆதி புருஷ், புராஜக்ட் கே, பெயரிடப்படாத ஒரு படம்' என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். அவரும், பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'ஆதி புருஷ்' படத்தில் பிரபாஸ் ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார்.
வருண் தவான், கிர்த்தி சனோன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பேடியா' படத்தின் பிரமோஷனுக்காக கரண் ஜோஹரின் 'ஜலக் திக்லா ஜா' நிகழ்ச்சியில் வருண் மற்றும் கிர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வருணிடம் “பாலிவுட்டில் சிங்கிள் ஆக இருக்கும் நடிகைகள் யார் யார் ?,” என கரண் ஜோஹர் கேட்டார். அவர் சொன்ன பட்டியலில் கிர்த்தி சனோன் இடம் பெறவில்லை. ஏன் அவர் பெயரைச் சொல்லவில்லை என கரண் வருணிடம் கேட்டதற்கு, “கிர்த்தியின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை, ஏனென்றால் அவர் வேறொருவரின் இதயத்தில் இருக்கிறார். அவந்த மனிதர் தற்போது மும்பையில் இல்லை, தீபிகா படுகோனேவுடன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்,” என்று பதிலளித்தார். பிரபாஸ் தற்போது தீபிகாவுடன் புராஜக்ட் கே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதன் மூலம் பிரபாஸ், கிர்த்தி சனோனன் இருவரும் காதலில் இருப்பதை சக நடிகரான வருண் தவான் உறுதி செய்துள்ளதாக ரசிகர்களும் கருதுகிறார்கள்.