'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் தோர். இந்த கேரக்டரில் தொடர்ந்து நடித்து வந்தவர் ஆஸ்திரேலிய நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். இவருக்கு சமீபத்தில் வழக்கமான உடல் பரிசோதனை நடந்தது. அப்போது அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி நோய்க்கான மரபணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் ஒரு சில ஆண்டுகளில் அவர் தனது நினைவுகளை இழந்து விடுவார். இதற்காபீ சிகிச்சைக்காக சில காலம் திரைப்படங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறார்.
2004ம் ஆண்டு 'ஹோம் அண்ட் அவே' என்ற தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற வேடத்தில் நடித்தார். அதன் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து 2009ம் ஆண்டு 'ஸ்டார் ட்ரெக்' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் 'அ பர்பெக்ட் கெட்டவே காலே' மற்றும் 2010 இல் 'காஷ்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு தோர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து தி அவேஞ்சர்ஸ், தோர்: த டார்க் வேர்ல்டு, அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான், தோர்: ரக்னராக், அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படங்களில் நடித்தார் கடைசியாக இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தில் நடித்தார்.