பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் யாசிர் உஸ்மான் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் ரேகா தனது பெண் செயலாளர் பர்சானாவுடன் லெஸ்பியன் உறவில் இருந்ததாகவும், அவர் இல்லாமல் ரேகாவால் ஒரு நிமிடம்கூட தனியாக இருக்க முடியாது என்றும், ரோகாவின் கணவர் முகேஷ் அகர்வாலின் தற்கொலைக்கு பர்சானாவும் காரணம் என்றும், ரேகா பல முன்னணி நடிகர்களிடன் தனிப்பட்ட உறவில் இருந்தாகவும் அந்த புத்தகத்தில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானது.
இதனை எழுத்தாளர் யாசிர் உஸ்மான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ரேகா குறித்த நான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் பெண் செயலாளருடன், அவர் தொடர்பில் இருந்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் பொய்யானவை. பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி தவறான கருத்துகளை எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெளியிடுகிறார்கள். இதனை முற்றிலும் மறுக்கிறேன். அப்படி எந்த ஒரு தகவலும் புத்தகத்தில் இல்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.