ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஜவான்'. அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் போஸ்டரை இன்று தனது ட்விட்டரில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் அந்த போஸ்டரில் ‛தி டீலர் ஆப் டெத்' என்று கேப்சனுடன் வெளியிட்டுள்ளனர். ஜவான் படத்தை 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.