பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
பார்த்திபன் இயக்கி, நடித்து ஒரே ஷாட்டில் எடுத்த ‛இரவின் நிழல்' படம் திரைக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது அப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் சிறிய பழுவேட்டரையராக நடித்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த நிலையில் அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருப்பதாக சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார் பார்த்திபன்.
இந்த நிலையில் தற்போது கொச்சியில் இருந்தபடி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மெதுவே நகரும் படகுகள் நடுவே நாட்களைப் போலவே கடந்து செல்லும் அந்த கரும் படகு. இன்று கொச்சி , நாளை கோவை, நாளை மறுதினம் காங்கேயம் ஊர் ஊராய் ஊர்ந்து செல்கிறேன். ஊற்றெடுக்கும் கற்பனைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் ஒரு படைப்பு விரைவில்'' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
தான் விரைவில் அடுத்த படத்தை அறிவிக்கப்போவதை இப்படி அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.